சென்னை,அக்டோபர்.19- சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தீட்சிதர் பணி நீக்க விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிடத் தடை கோரி பொது தீட்சிதர்கள் குழு தொடர்ந்த வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.
அந்த விசாரணையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் காசு கொடுத்தால்தான் பூ கிடைக்கும் இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது. தீட்சிதர்கள் ஒன்றும் கடவுளுக்கு மேலானவர்கள் அல்ல, பக்தர்கள் வரும்வரைதான் கோயில் இல்லையென்றால் கோயில் இல்லை, கோயிலுக்கு வரும் பக்தர்களைத் தீட்சிதர்கள் அவமானப்படுத்துகிறார்கள் என்று நீதிபதி தண்டபானி குற்றம் சாட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வது நல்லதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தீட்சிதர்களின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.